அழுத்த அனற்கலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெட்டி வடிவ அழுத்த அனற்கலன்
பயன்பாடுகிருமியழித்தல்
கண்டுபிடித்தவர்சார்லசு சேம்பர்லாந்து
படைப்பர்ஏஸ்டெல் சயின்டிஃபிக்
தொடர்புடைய கருவிகள்கழிவு அழுத்த அனற்கலம்

அழுத்த அனற்கலம் (autoclave) என்பது தொழில்துறை மற்றும் அறிவியல் செயல்முறைகளை மேற்கொள்ளப் பயன்படும் ஒரு கருவியாகும். இக்கருவி அதிக வெப்ப அளவான 121°செ அல்லது அதற்கு மேலும் வெப்பத்தை வெளிப்படுத்தக்கூடியது மற்றும் 15 முதல் 20 நிமிடங்களில் தேவையான வெப்பநிலையை அடையக் கூடியது. கருவியல் ஏற்றப்படும் கொள்ளளவு மற்றும் உள்ளடக்கங்களைப் பொருத்து அதன் வெப்பநிலையில் மாற்றம் செய்யலாம்.[1] இக்கருவியை சார்லஸ் சாம்பர்லாண்ட் என்பவர், 1879ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்.[2] இக்கருவியின் முன்னோடி என்று ஸ்டீம் டைஜஸ்டர் என்ற சாதனத்தை அழைப்பர். இதை உருவாக்கியவர் டெனிஸ் பபின் ஆவார். இவர் 1679ஆம் ஆண்டு இதைக் கண்டறிந்தார்.

வகைகள்

[தொகு]

அழுத்த அனற்கலங்களில் இரண்டு வகைகள் உண்டு:

  • மேல்புறத்தில் அடுப்பு வடிவத்தில் இருக்கும் அனற்கலம், சமையல் அழுத்த சமையற்கலன் போன்ற தோற்றத்தைக் கொண்டது. ஒவ்வொரு பகுதியும், முழுமையாக மூடி இருக்கும்படியும், வெளிப்புறத்தில் அழுத்த அளவுமானியைக் கொண்டதாகவும் இருக்கும். இந்தப் பகுதிகளுக்கு, வெளிப்புற வெப்பமூலம் தேவைப்படும் மேலும் போதிய பயிற்சிப் பெறாமல் இதை இயக்குவது மிகவும் ஆபத்தானது. தொழில்முறை வல்லுநர்கள் மட்டுமே இதை இயக்க வேண்டும்.
  • முன் சுமையேற்ற அழுத்த அனற்கலன்களைத் தங்களது வசதிக்காகப் பயன்படுத்தினாலும், அதைக் கூடுதல் கவனத்துடன் இயக்குவது அவசியம். பெட்டி வடிவிலான, சுயக் கட்டுப்பாடு கொண்ட பகுதிகளானது, வெப்பமாக்கல் கருவியுடன் அமையப்பெற்றதாகும். இந்தக் கருவிகளின் பணியானது தண்ணீரை ஆவியாக்கி, கொதிக்க வைக்கும். இயக்குபவருக்குத் தேவையான அளவு வெப்பநிலையை வைத்துக்கொள்ள இக்கருவியில் கட்டுப்பாடுகள் உள்ளன. மேலும் எவ்வளவு நேரம் இயந்திரம் இயக்கத்தில் இருக்கவேண்டும் என்பதையும் இயக்குபவர் தேர்வுசெய்யலாம். அறையின் வெப்பநிலை/அழுத்தத்தைச் சோதிக்கும் அளவுமானியும் அதில் உண்டு.

பயன்கள்

[தொகு]

அழுத்த அனற்கலன்களானது, பெரும்பாலும் நுண்ணுயிரியல், மருத்துவம், பச்சைக்குத்துதல், உடலில் துளையிடல், கால்நடை அறிவியல், பூஞ்சையியல், பல் மருத்துவம், அடிக்கால் மருத்துவம் மற்றும் செயற்கை உறுப்பு பொருத்தலியல் போன்ற துறைகளில் பயன்படுகிறது.

கண்ணாடிப் பொருட்கள், மருத்துவக் கழிவுகள், சமையலறைச் சாமான்கள், விலங்குகளுக்கென பயன்படுத்தப்படும் பொருட்கள், லைசோஜெனி ப்ராத் போன்ற சுமைகளும் இதில் அடங்கும்.[3]

தற்போதைய காலத்தில் அழுத்த அனற்கலன்களின் குறிப்பிடத்தக்க மற்றும் அதிகரித்து வரும் பயன்பாடு என்பது கழிவுப் பொருட்களை, குறிப்பாக நோய்க்கிருமி பரவும் மருத்துவமனைக் கழிவுகளை, முன்கூட்டியே சுத்திகரித்து கிருமி நீக்கம் செய்வதாகும். இந்த வகையைச் சேர்ந்த இயந்திரங்கள் பெரும்பாலும் வழக்கமான அழுத்த அனற்கலன்களின் அதே கோட்பாடுகளின் அடிப்படையில் இயங்குகின்றன. அவை அழுத்தப்பட்ட நீராவி மற்றும் அதிக வெப்பமூட்டப்பட்ட நீரைப் பயன்படுத்தி, சாத்தியமான தொற்று ஏற்படுத்தும் காரணிகளை நடுநிலைப்படுத்துகின்றன (ஆனால் முற்றிலும் அகற்றவில்லை).

புதிய தலைமுறைக் கழிவு மாற்றிகள் அழுத்தக் கலனின்றியே இதே விளைவை அடைய முடிகிறது. இவை இரப்பர் பொருட்கள், மேலங்கிகள், கட்டுத் துணிகள், கையுறைகள் போன்றவற்றை கிருமி நீக்கம் செய்யப் பயன்படுகின்றன. சூடான காற்று அடுப்பின் உயர் வெப்பநிலையைத் தாங்க முடியாத பொருட்களுக்கு இது குறிப்பாக பயனுள்ளதாக உள்ளது.[4]

காற்று வெளியேற்றம்

[தொகு]

அதிக அழுத்த நீராவியால் நோய்க்கிருமி நீக்கம் செய்யும் கருவியை (autoclave) இயக்கும் முன் அதனுள் அடைபட்டுள்ள காற்றை முழுவதுமாக வெளியேற்றுவது மிகவும் முக்கியம் ஆகும். ஏனெனில், அடைபட்டுள்ள காற்று கிருமி நீக்கம் செய்வதற்கு இடையூறு செய்யும் மிகவும் மோசமான ஊடகமாகும். 134 °செல்சியசு (273 °பாரன்ஹீட்டு) வெப்பநிலையில் உள்ள நீராவி மூன்று நிமிடங்களில் விரும்பிய அளவு கிருமி நீக்கத்தைச் செய்ய முடியும். அதே அளவு கிருமி நீக்கத்தை வெப்பக் காற்றுள்ள சூழலில் அடைய 160 °செல்சியசு (320 °பாரன்ஹீட்டு) வெப்பநிலையில் இரண்டு மணி நேரம் தேவைப்படுகிறது.[5]

கீழ்ப்புற இடப்பெயர்ச்சி முறை

[தொகு]

நீராவியானது அறையினுள் நுழையும்போது, அது காற்றை விட குறைந்த அடர்த்தி கொண்டதாக இருப்பதால் முதலில் அறையின் மேல் பகுதிகளை நிரப்புகிறது. இந்தச் செயல்முறை காற்றை கீழே அழுத்தி, பெரும்பாலும் வெப்பநிலை உணரியைக் கொண்ட வடிகால் வழியாக வெளியேற்றுகிறது. காற்று வெளியேற்றம் முழுமையாக முடிந்த பிறகே வெளியேற்றம் நிறுத்தப்படுகிறது. பொதுவாக இந்த ஓட்டம் ஒரு நீராவிப் பொறி அல்லது வரிச்சுருள் கட்டுப்பாட்டிதழால் கட்டுப்படுத்தப்படுகிறது, ஆனால் சில நேரங்களில் கசிவுத் துளைகள் பயன்படுத்தப்படுகின்றன. நீராவியும் காற்றும் கலக்கும்போது, அறையின் அடிப்பகுதியைத் தவிர வேறு இடங்களிலிருந்தும் கலவையை வெளியேற்றுவது சாத்தியமாகிறது.

நீராவித் துடிப்பு முறை

[தொகு]

தொடர்ச்சியான நீராவித் துடிப்புகளைப் பயன்படுத்தி காற்றானது ஆவியாக்கப்படுகிறது. சுழலின் அழுத்தத்திற்கு ஏற்றவாறு கருவியின் அறையில் அழுத்தமோ அல்லது அழுத்த நீக்கமோ மாறி மாறி ஏற்படும்.

வெற்றிடக் குழாய்கள்

[தொகு]

கருவியின் அறையில் இருக்கும் காற்று அல்லது காற்று/வெப்பக் கலவைகளை உறிஞ்ச இது உதவும்.

மிகை வளிமண்டல அழுத்தம்

[தொகு]

வெற்றிடப் பம்பு செயல்முறையினால் இது அடையப்படுகிறது. வெற்றிடப் பம்புடன் தொடங்கி, அதைத் தொடர்ந்து ஒரு நீராவித் துடிப்பு, பின்னர் மீண்டும் ஒரு வெற்றிடப் பம்பு செயல்முறை, அதைத் தொடர்ந்து மற்றொரு நீராவித் துடிப்பு என தொடர்கிறது. துடிப்புகளின் எண்ணிக்கை குறிப்பிட்ட அழுத்த அனற்கலன் மற்றும் அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட சுழற்சியைப் பொறுத்து மாறுபடும்.

வளிமண்டல அழுத்தத்திற்குக் கீழான சுழற்சிகள்

[தொகு]

வளிமண்டல அழுத்தத்திற்கு மேலான சுழற்சிகளைப் போலவே, இந்த முறையிலும் கருவியின் அறையின் அழுத்தம் நோய் நுண்மத் தீர்வாக்கம் செய்யும் வெப்பநிலைக்கு உயரும் வரை வளிமண்டல அழுத்தத்திற்கு மிகாமல் ஒருபோதும் மீறுவதில்லை.

மலிவான அல்லது மருத்துவம் சாராத சூழல்களில் பயன்படுத்தப்படும் அடுப்பு மேல் வைக்கும் அழுத்த அனற்கலன்களில் தானியங்கி காற்று வெளியேற்றும் நிகழ்வுகள் எப்போதும் இருக்காது. அளவி காட்டும் குறிப்பிட்ட அழுத்தங்களில் நீராவித் துடிப்பாக்குவதை இயக்குபவர் கைமுறையால் செய்ய வேண்டியிருக்கும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Microbiology, Jacquelyn Black, Prentice Hall,1993 pg 334
  2. "Chronological reference marks - Charles Chamberland (1851–1908)". Pasteur Institute. பார்க்கப்பட்ட நாள் 19 சனவரி 2007.
  3. "Sterilization Cycles". Consolidated Machine Corporation. பார்க்கப்பட்ட நாள் 2009-06-30.
  4. Seymour Stanton Block (2001). Disinfection, Sterilization, and Preservation. Lippincott Williams & Wilkins. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-683-30740-5. பார்க்கப்பட்ட நாள் 19 January 2013.
  5. Joint Technical Committee HE-023, Processing of Medical and Surgical Instruments (6 April 2006), Australian/New Zealand Standard: Office-based health care facilities— Reprocessing of reusable medical and surgical instruments and equipment, and maintenance of the associated environment (AS/NZS 4815:2006) (pdf), Standards Australia/Standards New Zealand, பார்க்கப்பட்ட நாள் 11 June 2024{{citation}}: CS1 maint: numeric names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அழுத்த_அனற்கலம்&oldid=4097826" இலிருந்து மீள்விக்கப்பட்டது